இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Tsunami
Indonesia
Earthquake
By Sathangani
இந்தோனேஷியாவின் - சும்பாவா தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் இன்று (04) 5.9 ரிக்டர் அளவில் பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6.21 மைல்கள்) ஆழத்தில் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து உடனடி உயிரிழப்புகளோ அல்லது பாரிய சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
சுனாமி எச்சரிக்கை
மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா பசுபிக் 'நெருப்பு வளையத்தில்' அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி இவ்வாறான நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்