யாழ். மாநகரசபையின் அலட்சியம் : குப்பைக்கிடங்காக மாற்றப்படுகிறதா கிட்டுப்பூங்கா....
யாழ்ப்பாணத்தினுடைய மையப்பகுதியில் நல்லூர் பிரதேசத்தில் இருக்கக்கூடிய சங்கிலியன் பூங்கா என அழைக்கப்படும் கிட்டுப்பூங்கா போதிய பராமரிப்புக்கான பூரணமான நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண மாநகர சபையினுடைய ஆளுகைக்கு உட்பட்ட குறித்த பகுதி வேலிகள் சரியான முறையில் இல்லாத ஒரு சூழலில் அனாமதேயமான சம்பவங்கள் அங்கே இடம்பெறுவதாகவும், குப்பைகள் கொட்டுகின்ற இடமாக மாறி வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அருகிலே குடியிருக்க கூடியவர்கள் இங்கு கொட்டப்படுகின்ற குப்பைகளால் மிகப்பெரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் நிகழ்வுகள் நடக்கின்ற போது குப்பைகள் கொட்டப்படுவதாகவும் ஆனால் பின்னர் அதனை மாநகர சபையினர் அகற்ற மாட்டார்கள் எனவும் இங்கே குவிக்கப்படுகின்ற குப்பைகளால் தங்களுடைய வீடுகளுக்கு நுழம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |