வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்
Earthquake
World
By Thulsi
வங்காள விரிகுடாவில் 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கம் இன்று (02.12.2025) காலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
எனினும் இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை.
சுனாமி போன்ற அனர்த்தங்கள்
இருப்பினும் நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏதும் ஏற்படுமா எனும் அச்சம் மக்களிடையே நிலவுவதால் நில அதிர்வு மையம் தொடர்ந்து இது குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

வங்காள விரிகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் டெக்டோனிக் தட்டு அசைவுகள் காரணமாக அவ்வப்போது நில அதிர்வு நடவடிக்கைகளை அனுபவிக்கின்றன.
"நெருப்பு வளையம்" போல இந்தப் பகுதி கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகவில்லை என்றாலும், மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |