யாழில் உள்ளக விளையாட்டு அரங்கு நிர்மாணம் - ஜனாதிபதியின் உத்தரவு
உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நேற்று (16.01.2026) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக, அவர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொழுதுபோக்காக வாழக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
உள்ளக விளையாட்டு அரங்கு
யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அரசியல்வாதிகளின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது.

யாழ்ப்பாண பிள்ளைகளுக்கு அது அவசியமானது. ஆனால் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்கின்றனர்.
அதாவது அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலை செய்கிறார்கள். நாம் மிக விரைவில் அந்த வழக்கை நிறைவு செய்து அதே இடத்திலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் அந்த உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம் என்றார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துமாறு அரசாங்க அதிபரை ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |