369 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Financial crisis
By Sumithiran
இறக்குமதி தடை நீக்கம்
369 பொருட்கள் மீதான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி அளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அத்தியாவசியமில்லாதவை எனத் தெரிவித்து இந்தப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இவற்றை இறக்குமதி செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம்
தற்போது நடைமுறையிலுள்ள பொருந்தக்கூடிய வரிகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் இல்லாமல் அவற்றை இறக்குமதி செய்யலாம்.
இதேவேளை, 8 வீதமாக இருந்த வற் வரி இன்று முதல் 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/b3ca51bc-b565-4f9b-b34a-2accdf7e01bf/22-6297577ea899d.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்