உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்! மைத்திரியின் அறிவிப்பால் பரபரப்பு
Kandy
Maithripala Sirisena
Easter Attack Sri Lanka
By Shadhu Shanker
ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டது யார் என எனக்கு தெரியும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று(22) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் எங்கு நடந்தது என்பதையும் நாம் அறிவோம்.
அந்த வழக்குகள் அனைத்தையும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கிறது.
ஈஸ்டர் தாக்குதலை உண்மையில் யார் செய்தார்கள் என்று இதுவரை யாரும் கூறவில்லை, ஆனால் அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதைச் சொல்லத் தயாராக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |