உலகில் ஏற்படவுள்ள மிக அரிய சூரிய கிரகணம்...!
உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் நிகழவுள்ளது.
இந்த முழு சூரிய கிரகணம் 8 ஆம் திகதி மதியம் 2.12 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் (9) அதிகாலை 2.22 வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணம்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து பூமியின் மீது நிழல் படும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நிகழ்வின் போது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
இதன் போது, சூரியனின் ஒளியை நிலவு பூமியின் சில பகுதிகளில் விழுவதைத் தடுக்கிறது. இதனால், முழு சூரிய கிரகணத்தின் போது சிலப் பகுதிகளில் சூரிய ஒளிபடாமல் அடர்ந்த இருட்டு ஏற்படும்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
இந்த அரிய முழு சூரிய கிரகண நிகழ்வு வட அமெரிக்கா உள்பட சில பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முழு சூரிய கிரகணம் டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி, நியூயார்க், பென்சில்வேனியா, வெர்மான்ட், இல்லினாய்ஸ், இந்தியானா, ஓஹியோ, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மைனே ஆகிய மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிபுணர்கள் எச்சரிக்கை
இந்த சூரிய கிரகணத்தால் ஏற்படும் சூரிய மின் உற்பத்தியில் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏழு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் ஏற்படும் இரண்டாவது சூரிய கிரகணம் இது எனவும் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அசாதாரணமானவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சூரிய மின் உற்பத்தி, மின்சார அமைப்பு ஆபரேட்டர்களுக்கு தனித்துவமான சிக்கலை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்வரும் 8 ஆம் திகதி தென்படவுள்ள முழு சூரிய கிரகண நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் உணவு மற்றும் எரிவாயுவை சேமித்து வைக்குமாறு டெக்சாஸ் அதிகாரிகள் உள்ளூர் மக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |