ரஷ்ய போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி! கவலையில் ஜெலன்ஸ்கி
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது நான்காவது ஆண்டை கடந்துள்ளது.
இந்த சூழலில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலகின் பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
5 லட்சம் பேர் உயிரிழப்பு
2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மோதலில், இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 லட்சம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: ODI Global
சர்வதேச ஆய்வுகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தப் போரில் ரஷ்யா தரப்பில் சுமார் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் தரப்பில் சுமார் 1.4 லட்சம் பேரும் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |