மாகந்துரே மதுஷின் மனைவி, மகன் உட்பட ஐவர் அதிரடி கைது!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
மறைந்திருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் மகன் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு காவல்துறை கான்ஸ்டபிளைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் மதுஷின் மனைவியுடன் தகாத உறவைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் சம்பவம்
இந்த நிலையில், அவரது வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, மதுஷின் மனைவி, அவரது மகன் மற்றும் பலர் கான்ஸ்டபிளைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த கான்ஸ்டபிள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |