ஐ.நாவில் 'சனல் 4' முக்கிய ஆதாரங்கள்! விழிபிதுங்கி நிற்கும் ராஜபக்சர்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா கூறிய விடயங்களை விட நிசாந்த டி சில்வா கூறிய விடயங்கள் காத்திரம் வாய்ந்தவை அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து தப்பிச்சென்ற நிசாந்த டி சில்வாவை மீண்டும் நாட்டிற்கு வரவழைப்பதில் ராஜபக்ச தரப்பினர் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டனர்.
ராஜபக்சர்களுக்கு பெரும் சவால்
இலங்கை சார்ந்த தடயங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் காப்பகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காப்பகத்தில் நிசாந்த டி சில்வாவிடம் இருக்கும் ஆவணங்கள் எல்லாம் சென்றடைந்து விட்டால், அவை நிரந்தரமாக பாதுகாப்பாக இருக்கும். இது தமக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் எனும் பீதியில் அந்த முன்னெடுப்புகளை செய்தனர்.
கோட்டாபய ராஜபக்ச அதிபராகிய சந்தர்ப்பத்தில் தான் நிசாந்த டி சில்வாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதில் ஒரு திட்டமாக, நிசாந்த டி சில்வா ஒரு இராணுவ வீரரை கொலை செய்தார் எனவும் அதன் காரணமாகவே வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதில் அவரை நாடுகடத்த வேண்டும் என்ற பின்புலமும் கோட்டாபய அரசினால் தோற்றுவிக்கப்பட்டது.'' என தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக, ராஜபக்சர்கள் மீதான குற்றச்சாட்டு, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்புலம், சனல் 4 காணொளியின் உண்மைத்தன்மைகள் பற்றி விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,