உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது - சந்திரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு
Chandrika Kumaratunga
Gotabaya Rajapaksa
Maithripala Sirisena
Easter Attack Sri Lanka
By Sumithiran
கோட்டாபய ராஜபக்ஷவை அதிபராக தேர்ந்தெடுப்பதற்காகவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பு
தாக்குதல்களுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளை தான் நம்புவதாக தெரிவித்தார்.எனினும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றார்.
ராஜபக்ச குழாம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்ஷ குழாம் முயற்சிக்கின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்