மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter Sunday attack) சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் தேடிப்பார்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பிலும் விரைவாக தேடிபார்க்கபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எந்த விடயமும் மூடிமறைக்கப்பட மாட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியிடம் அடைக்கலம்
இதேவேளை, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, ஊடகவியலாளர் பிரதிப் எக்னெலிகொட படுகொலை உட்பட பல்வேறு படுகொலைச் சம்பவங்களின் முக்கியசாட்சி ஒருவர் இலங்கை ஜனாதிபதியிடம் அடைக்கலம் கோரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு மனிதஉரிமை மீறல் சம்பவங்களின் முக்கிய நேரடிச் சாட்சியான அவர் மீதான கொலை முயற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சுமத்திய அவர், இன்று ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக பல சம்பவங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |