தீவிரவாதிகளின் மிலேச்சத்தனத் தாக்குதலே நாட்டின் அழிவிற்கு காரணம்!
மிலேச்சத்தனமான குன்டு தாக்குதல் காரணமாகவே இன்று இலங்கை அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது என சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மன்றே சாவில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்றைய தினம் 09.02 மணியளவில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கான விசேட ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இன்று நாட்டில் பொருளாதார சுமை, வாழ்வாதார சுமை மற்றும் நாடு ஸ்தித்திரத்தன்மையற்ற நிலையில் காணப்படுவதற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி அன்று தீவிரவாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலின் பிரதிபலனாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
தீவிரவாத குழுவின் மிலேச்சத்தனத் தாக்குதல்
இன்று நான்கு வருடங்கள் கடந்து இருந்தாலும் எங்கள் வேதாகமத்தில் சொல்வது போன்று நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம். ஆனாலும் அந்த சின்னம் சிறார்களின் உயிரிழப்பு இன்றுவரை எங்களது நெஞ்சங்களில் மாறாத வடுவாகத்தான் இருக்கின்றது.
இந்த தாக்குதலில் உயிர் இழந்த அனைவருக்கும் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
