பிள்ளையானுக்காக அனுதாப வாக்குச் சேகரித்தவர்களும் பதில் கூற வேண்டும் - எழுந்துள்ள கண்டங்கள்
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்த மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதலுக்கு பதில் கூற வேண்டும் என்று பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருந்து கொண்டு அனுதாப வாக்கை பெறுவதற்காக மட்டக்களப்பில் பிரபலமான கல்விமான்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள் என பலரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய சந்திரகாந்தனின் கபட நாடகங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பின்னணியில் ராஜபக்சக்களும் பிள்ளையானும்
உண்மையிலேயே மட்டக்களப்பு மக்களை மடையர்களாக்கி அனுதாப வாக்கு சேகரிக்கச் சென்ற குறித்த இதர வேட்பாளர்களும் தற்போது வெளிவந்துள்ள முதலாவது காணொளியில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கும் இதன் பின்னணியில் ராஜபக்சக்களும் சிவனேசத்துறை சந்திரகாந்தனும் இருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
எதைக்காட்டி மக்களை மடையர்களாக்கி வாக்கு சேகரித்தார்களோ அவர்கள் அனைவரும் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஜோசப் பராஜசிங்கம் கொலையில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் கை விலங்கை காட்டி பெற்ற ஒவ்வொரு வாக்கும் இந்த ஒரு வாக்கின் மூலம் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறுவரும் அராஜகங்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கி ஆள நினைப்பதும் ராஜபக்சகளின் தொனியில் ஆட்சி நடத்துவதும் இன்று மட்டக்களப்பு மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
ஆகவே இந்த கைவிலங்கை காட்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக வாக்கு சேகரித்து அனைவரும் பதில் கூறியே ஆக வேண்டும் என்று மட்டக்களப்பு மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
YOU MAY LIKE THIS