மீண்டும் அதிகரிக்கு நீர்மட்டம்: மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!
தற்போது நாட்டில் நிலவும் பலத்த மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அதிகாரசபை அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்கள்
மேலும், கலாவெவ வடிநிலத்திற்குட்பட்ட கலாவெவ மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய்ந்து வருவதாகவும், போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகபட்ச மட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் அதிகபட்ச நீர்மட்டத்தில் உள்ளதால், அந்த நீர்த்தேக்கமும் விரைவில் வான் பாயக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி, உடுதும்பர பகுதிக்கு 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படும் இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துத் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்