உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துத் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த முறைப்பாடானது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றையதினம்(23) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அவர் ஊடகளுக்கு கருத்து தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என்று முன்னாள் அதிபர் கூறியிருக்கும் விடயத்தில் உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
உண்மைகள்
எனவே, உடனடியாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |