உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்…! : நாடாளுமன்றில் அனல் பறக்கப்போகும் விவாதம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்(easter attack) குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தில் முன்னர் இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட்ட போதிலும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
தாக்குதலின் உண்மையான மூளையாக இருப்பவர்கள் யார்
இதன் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான மூளையாக இருப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி, வரவிருக்கும் விவாதத்தின் போது அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க அழுத்தத்தை செலுத்த எதிர்க்கட்சி தயாராகி வருகிறது.
ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படும் என்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பொதுமக்களுக்கு பலமுறை உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
