உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல்

Namal Rajapaksa Pillayan Easter Attack Sri Lanka Janatha Vimukthi Peramuna
By Independent Writer May 21, 2026 09:53 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர உறுப்பினர்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாகவும் இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் "கடைசி நூல்" மக்கள் விடுதலை முன்னணி வசமே உள்ளது என்பது தற்போது தெளிவாகியிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

பிள்ளையானை சிறையில் சந்தித்த விவகாரம் : குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாமல்

பிள்ளையானை சிறையில் சந்தித்த விவகாரம் : குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாமல்

 பிள்ளையான் அரசியல் கைதி

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளையானைப் பார்ப்பதற்கு நான் சிறைச்சாலையின் சுவரைத் தாண்டிக் குதிக்கவில்லை. சட்டப்பூர்வமாக, ஆவணங்களில் கையெழுத்திட்டுத்தான் பார்க்கச் சென்றேன். அந்த நேரத்தில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார். அது ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல் | Easter Sunday Attackers Parents Are Jvp Members

நிலைமை இப்படி இருக்கையில், பொதுமக்களின் பணத்தைச் செலவழித்து பிரான்சுக்குச் சென்று, நாமல் பிள்ளையானைப் பார்க்கச் சென்றாரா என்று வாக்குமூலம் எழுதுவது பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் பிள்ளையான் அரசியல் கைதியாக வைக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர பிள்ளையான் செய்த அர்ப்பணிப்புக்காக முன்நின்று பேசுவதற்குத் நாம் இருமுறை யோசிக்கப் போவதில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கி, அதே அதிகாரியை அனுப்பி வாக்குமூலம் எழுதி வாங்குகின்றனர்.

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணி

இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP)  தீவிர உறுப்பினர்கள், தாக்குதல் நடத்தியவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்த ஒரு நபர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல் | Easter Sunday Attackers Parents Are Jvp Members

தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்களிடம் இருப்பதாகக் கூறிய சாட்சிகளை அவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

மிரட்டி, வலுக்கட்டாயமாக வாக்குமூலங்களை எழுதி வாங்கி, மனித உயிர்கள் இழந்திருக்கும் நிலையிலும், அதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற முயற்சிக்கிறார்கள்.

இதிலிருந்தே இந்நாட்டின் சட்டம் யாருடைய தேவைக்காகவும், யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் செயல்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது“ எனத் தெரிவித்தார். 

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026