கிழக்கு மாகாண ஆளுநரை விமர்சித்த அமைச்சர் நஸீர் அஹமட்
By pavan
கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?, இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது என அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார்.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம். ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனவும், அது நிறுத்தப்படல் வேண்டும் எனவும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கு பேசும்போதே அமைச்சர் காரசாரமாகக் கிழக்கு மாகாண ஆளுநரை விமர்சித்தார். தான் முதலமைச்சராக இருந்ததாகவும், ஆனால் இப்படி செயற்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி