கரு கருன்னு நீளமான கூந்தல் வேண்டுமா... இன்றே இதனை செய்யுங்கள்
இந்த உலகிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான பளபளப்பான அடர்ந்த கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பான விடயம்.
அந்தவகையில் கூந்தலை பளபளப்பாக்க சந்தையில் பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
எனினும் தலைமுடியை பளபளப்பாக மாற்ற வீட்டு வைத்தியத்தை நாடுவது மிகவும் நல்லது.
ஆகவே கூந்தலை பளபளப்பாக மாற்றும் வீட்டு வைத்தியம் பற்றிய அழகு குறிப்புகளை நோக்குவோம்.
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு
கூந்தலை பளபளப்பாக மாற்ற தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த எண்ணெயில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கலவையை தயார் செய்யவும்.
இப்போது இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
மேலும், இந்தக் கலவையைப் பயன்படுத்தும்போது, லேசான கையால் முடியை மசாஜ் செய்யவும். அதன் பிறகு, முடியை சாதாரண நீரில் கழுவவும்.
இந்த கலவையை பயன்படுத்துவதன் மூலம், முடி வளர்ச்சி அதிகரித்து, முடி பளபளப்பாக கறுப்பாக மாறும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
