கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!
சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒரு பொருளாக இருப்பது கற்றாழை ஆகும்.
பல நூற்றாண்டுகளாக கற்றாழையை பல்வேறு நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்குப் பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவ்வாறான, கற்றாழை ஜெல்லை இரவில் முகத்தில் தடவுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்....
கற்றாழை
கற்றாழையானது இயற்கையாகவே ஈரப்பதமானது, எனவே இதனை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது இயற்கையான ஈரப்பதம் சருமத்திற்கு கிடைக்கின்றது.
எனவே, வறண்ட அல்லது நீர் இழப்பு சருமம் உள்ளவர்களுக்கு கற்றாழை சிறந்த தேர்வாக அமையும்.
மென்மையான அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் சிறந்த தேர்வாக அமையும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.
கிடைக்கும் நன்மைகள்
வெயிலின் அதிகப்படியான தாக்கம், அதிக முகப்பரு, சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து வருகிறீர்கள் என்றால், இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை தொடர்ச்சியாக தடவி வருவது மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் E உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதால், வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும்.
கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடி சருமத்திற்கு பாதுகாப்பை வழங்குகிறது.
வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?
உங்கள் சருமத்தில் சுத்தமான கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்த விரும்பினால், அதை வீட்டிலேயே செய்யுங்கள்.
- முதலில் அலோ வேரா ஜெல் செடியை உடைத்து கொள்ளவும்.
- இப்போது அதை கத்தியின் உதவியுடன் உரிக்கவும்.
- ஒரு பெரிய கரண்டியால் ஜெல்லை வெளியே எடுக்கவும்.
- இந்த ஜெல்லை மிக்ஸியில் அரைக்கவும். இவ்வாறு செய்வதால் கட்டி தங்காது.
- இதோ, வீட்டில் தயாரிக்கப்பட்ட கற்றாழை ஜெல் தயார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
