காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸின் தாண்டவம்: 65 பேர் பலி
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் இடுரி மாகாணத்தில் புதிதாக வைரஸ் ஒன்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த எபோலா வைரஸ் தொற்றின் காரணமாக 65 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை ஆப்பிரிக்க உயர்மட்ட சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உடல் திரவங்கள்
வாந்தி, இரத்தம் மற்றும் விந்து போன்ற உடல் திரவங்கள் மூலம் மிக எளிதில் பரவக்கூடிய எபோலா வைரஸ், பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
காங்கோவில் கடைசியாக பரவிய எபோலா நோய் தொற்றால் 43 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக 246 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1976ஆம் ஆண்டு முதல் காங்கோவில் எபோலா நோய் தொற்று பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது 17வது முறையாக மீண்டும் இந்த நோய் தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |