முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இது குறித்து மேலும் தெரியவருகையில்
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவேளை கொக்குளாய் காவல்துறையின் சோதனை நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கொக்குளாய் காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு
குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களுடன் கொக்குளாய் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |