ஈரான் அதிபருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான்
கடந்த வாரத்தில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம்ரைசியின் திடீர் மரணத்திற்கு ஜீவன் தொண்டமான் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (27) சென்ற நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.
திடீர் உயிரிழப்பு
மேலும் ஈரான் அதிபர் உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரியது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு ஈரானும் இலங்கையும் நெடுங்காலமாக நட்போடு திகழ்கின்றன.இலங்கையின் அபிவிருத்திக்கு அவர் பல ஒத்துழைப்புகளை நல்கியுள்ளார்.
விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது. இதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் என ஈரான் தூதுவரிடம் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |