யாழ் கடற்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரிய பயணிகள் படகு
இலங்கையின் தொழில்நுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கப்பல் 80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 தொன் எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் சுற்றுலாத்துறைக்காக
இதேவேளை வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளது.
அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சோலர் பனல் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது.
தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றிற்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |