பாரிய பொருளாதார நெருக்கடி - மூடப்படும் விலங்கு பண்ணைகள்
மூடப்படும் விலங்கு பண்ணைகள்
நாட்டில் தற்போது ஏறபட்டுள்ள பாரிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் சிறு மற்றும் நடுத்தர விலங்கு பண்ணைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து சேவைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் விலங்கு உணவுகளின் விலை அதிகரிப்பு என்பன விலங்கு பண்ணைகளை மூடுவதற்கு காரணமாய் அமைந்துள்ளன.
தீவனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு
கடந்த காலத்தில் 3,200 ரூபாவாக விற்கப்பட்ட கோழி தீவனம் பொதி ஒன்றின் விலை தற்போது 13,000 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கால்நடை வளர்ப்பாளர்களும் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னர் 2000 தொடக்கம் 3000 ற்குள் விற்பனையாகிய பால் மாஸ் மற்றும் தவிடு என்பன தற்போது கடுமையாக விலை உயர்ந்துள்ளதனால் தம்மால் கால்நடைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
