அனைத்துக்கும் கொரோனாவே காரணம் - அமைச்சர் விளக்கம்
corona
Prasanna Ranatunga
economics crisis
By Sumithiran
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு யார் விளக்கம் சொன்னாலும் கொரோனா தொற்று காரணமாகவே நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறுகிய கால நடுத்தர கால மற்றும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் உள்ள அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு தொலைநோக்குப் பார்வையையும் வேலைத்திட்டத்தையும் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மினுவாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
