பிச்சை எடுக்கும் நிலைக்குள் இலங்கை!!
நாட்டை தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் போது, 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கையிருப்பு இருந்தது. ஆனால், இன்று ஆட்சியாளர்கள் உலகம் பூராகவும் பிச்சை எடுக்கச் செல்கிறனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களின் மாநாட்டில் உரையாற்றும் போது சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினராக இருக்க நான் தயாரில்லை. அதற்கு மக்கள் ஆணை வழங்கவுமில்லை.
காலி முகத்திடல் மாத்திமின்றி நாட்டின் எந்த இடத்திலும் இந்த அடாவடித்தனமான அரசாங்கத்தை முதலில் வீட்டுக்கு அனுப்புமாறே மக்கள் கோருகின்றனர். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும்.
மக்களின் குரல் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கு அப்பால் நாம் எதனையும் செய்யபோவதில்லை. தற்போதைய அரச தலைவரையோ அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த யாருடனோ இணைந்து ஆட்சியமைக்குமாறு மக்கள் கோரவில்லை.
மொட்டுடன் ஆட்சி அமைத்து கொள்ளையர்களை பிடிக்க முடியாது” என்றார்.
