எடப்பாடி தலைவரானால் பன்னீர்செல்வத்திற்கு ஆப்பு தான்..!! மீண்டும் வலுக்கும் சர்ச்சை
ஒற்றைத் தலைமையை கேட்கச் சொல்வதே அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை மீண்டும் அதிமுகவில் எழுந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்றுமுன்தினம் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் மீண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளனர்.
இதனால் மீண்டும் ஒற்றைத் தலைமை என்கிற சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது. ஏன் திடீரென்று இவ்வாறான கருத்து வலுத்து வருகிறது? ஒற்றைத் தலைமை தற்போது அவசியமான ஒன்றா? இது போன்ற மேலும் பல கேள்விக்கான பதிலாய் வருகிறது இந்த நேர்காணல்,,,,