அடுத்த வருடம் பாடசாலைகளில் அறிமுகமாகவுள்ள புதிய பாடம்
Ministry of Education
A D Susil Premajayantha
By Vanan
அடுத்த வருடம் (2023) பாடசாலைகளில் தரம் 10 இற்கு செயற்கை நுண்ணறிவை (AI) பாடமாக அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று (01) நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கல்விக் கட்டமைப்பில் தொழில்நுட்பம்
இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு மைக்ரோசொப்ட் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்வி முறையானது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களும் தமது பாடங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய வகையில் பயிற்சியளிக்கப்பட வேண்டும்” - என்றார்.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்