ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Raghav Jan 18, 2025 07:37 AM GMT
Report

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு ஆளுமை, நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்.

 யாழ்ப்பாணம் - திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர்  நேற்றைய தினம் (17.01.2025) தனது 93வது வயதில் இயற்கை எய்தினார்.

அநுர அரசால் இலட்சக்கணக்கில் அரச ஊழியர்கள் பணி நீக்கம்! நாமல் பகிரங்கம்

அநுர அரசால் இலட்சக்கணக்கில் அரச ஊழியர்கள் பணி நீக்கம்! நாமல் பகிரங்கம்

நகைச்சுவை நாடகங்கள்

ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்று மொழிகளிலும் புலமையுள்ளவர். நுற்றுக்கு மேற்பட்ட சுயஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெர்ப்பு நாடகங்களையும் தமிழ்நாடக உலகிற்கு தந்த பேராளுமை இவர்.

இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக்காரணமாக அமைந்தது. ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை உருவாக்குவதில் பெரும் பணியாற்றியவர்.

ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்! | Eelam Tamil Drama Shanmugalingam Passed Away

திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தில் விதானை செல்வரத்தினத்துடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களை நடித்ததிலிருந்து இவரது நாடக வாழ்க்கை ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மகாநாட்டில் இவரது வையத்துள் தெய்வம் என்ற நாடகம் முதல்முதலில் மேடையேற்றப்பட்டது.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையான சந்திப்பு... ஒரு முக்கிய திருப்புமுனை : கஜேந்திரகுமார் எம்.பி

தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையான சந்திப்பு... ஒரு முக்கிய திருப்புமுனை : கஜேந்திரகுமார் எம்.பி

நாடகமும் அரங்கியலும்

இதன் பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பித்த அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாடக டிப்ளோமா பயிற்சியை தனது 45வது வயதில் பெற்றுக்கொண்டார்.

ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்! | Eelam Tamil Drama Shanmugalingam Passed Away

பின்னர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக்கல்லூரியை உருவாக்கிய இவர் உலகப்புகழ்பெற்ற நாடகர் தாஸிசியஸ் உடன் இணைந்து ஈழத்து நாடகர்களுக்கு தொடர்பயிற்சியை வழங்கியவர். நாடகம் கல்வியாக வரவேண்டும் அதனைக்கற்றறிந்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளதென்றால் அதற்கு மூலகாரணமானவர் குழந்தை ம. சண்முகலிங்கம். மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை ஆரம்பிக்க இவரது பணிமுக்கியமானது. ஆசிரியர்களுக்கான நாடகக்களப்பயிற்சிகள் பலவற்றை நடத்தி ஆசிரியர்களை நாடகத்துறையில் உருவாக்கியவர். இவருக்கு நீண்ட மாணவர் பரம்பரை உண்டு.

நூற்றுக்கணக்கான அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நூற்றுக்கணக்கான அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கலாநிதி பட்டம்

இவரது தனி முயற்சியால் பல இளைஞர்கள் நாடகத்தைக்கற்று தேர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இவரது நாடகங்கள் சமூக அரசியல் நிலைமைகளைப் பேசியிருக்கின்றன. க.பொ.த உயர்தரத்தில் நாடகத்தை ஒரு பாடமாகக் கொண்டுவர அவரது பங்களிப்பு முக்கியமானது. இதற்காக இலவசமாக நாடகத்தை பல ஆண்டுகள் கற்பித்தவர்.

ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்! | Eelam Tamil Drama Shanmugalingam Passed Away

தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர். இவரது முக்கியமான நாடகங்களாக மண்சுமந்த மேனியர், எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, ஆர்கொலோ சதுரர், கூடிவிளையாடு பாப்பா, பஞ்சவர்ணநரியார் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

இவரது நாடகப்பணியைப் போற்றி கிழக்குப்பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி கொளரவித்துள்ளது.

இவரது இழப்பு ஈழத்து நாடக உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது. தனிமனிதனாக தன்னலம் கருதாது நாடகமும் அரங்கியலும் துறைக்கு அளப்பெரிய பணியை ஆற்றியிருப்பதோடு, பல்கலைக்கழக நாடகத்துறையை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரியவர்.

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

இடமாற்றங்களால் நெருக்கடிக்குள்ளாகும் அதிபர், ஆசிரியர்கள் : ஆளுங்கட்சி எம்.பி சுட்டிக்காட்டு

இடமாற்றங்களால் நெருக்கடிக்குள்ளாகும் அதிபர், ஆசிரியர்கள் : ஆளுங்கட்சி எம்.பி சுட்டிக்காட்டு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026