ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளைப் போல் வாழும் நிலை! நீக்கப்படும் ஆதரவுக்கரம்
அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளைப் போல் வாழும் நிலை தற்போது காணப்படுகிறது என தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் சுட்டிக்காட்டியுள்ளர்.
நாம் 200 நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள அவர், எமது ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்தார்.
இந்தியாவில் குடியுரிமை
மேலும் தெரிவிக்கையில், '' இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் - பொருளாதார நெருக்கடிகளால் புலம்பெயர்ந்து, இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும்.
இல்லை என்றால் இலங்கைக்கு அவர்களை அழைத்து நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
எனினும், தற்போது அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
அடிமைகளைப் போலும், கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலிலும் அவர்கள் வாழக்கூடிய நிலையே தற்போது காணப்படுகிறது" என்றார்.