ஈழத்தமிழரின் நிரந்தர தீர்வுக்கான சுதந்திர வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்ட வலியுறுத்தல் கடிதம்!

Sri Lanka Sri Lanka Final War United States of America Tamil diaspora
By Kalaimathy Jan 27, 2023 08:32 AM GMT
Report

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண தமிழர்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்புநடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகள் கூட்டாக அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளன.

மேலும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச சட்டங்களை நடைமுறைப்படுத்த உதவுமாறும் அந்த கடிம் மூலம் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரசுக்கு கடிதம்

ஈழத்தமிழரின் நிரந்தர தீர்வுக்கான சுதந்திர வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்ட வலியுறுத்தல் கடிதம்! | Eelam Tamil Peoples Voting Tamil Diaspora America

மேலும் இலங்கைத் தீவை முறையற்ற வகையில் காலனித்துவ நீக்கம் (improper decolonization) செய்த பிரித்தானியாவிடமிருந்து, தீவு சுதந்திரமடைந்து, அடுத்த மாதம் 75 ஆண்டுகள் நிறைவடைவதையும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்தக் கடிதத்தை, உலகத் தமிழ் அமைப்புக் கூட்டமைப்பு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழர் அமைப்பு ஆகியவை இணைந்து எழுதி, 118வது அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இனப்படுகொலை

ஈழத்தமிழரின் நிரந்தர தீர்வுக்கான சுதந்திர வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்ட வலியுறுத்தல் கடிதம்! | Eelam Tamil Peoples Voting Tamil Diaspora America

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர் கலாநிதி முருகையா முரளீதரன் தெரிவிக்கையில்,

“சுதந்திரத்திற்கான வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகளின் கூட்டுக் கடிதம் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான ஒரு முக்கிய திருப்பு முனையாகும். இது தமிழ் இனப்படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யும். 

மேலும் தமிழர்களுக்கு நீதி வழங்குவதன் மூலமும், அவர்களின் இறையாண்மையை திரும்பக் கொடுப்பதன் மூலமும் மட்டுமே பிராந்தியத்தில் அமைதி மற்றும் திடநிலையை நிலைநாட்ட முடியும். ஆகவே நிரந்தர தீர்வு முக்கியமானது.

சீனா ரஷ்யாவுடன் கூட்டு

ஈழத்தமிழரின் நிரந்தர தீர்வுக்கான சுதந்திர வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்ட வலியுறுத்தல் கடிதம்! | Eelam Tamil Peoples Voting Tamil Diaspora America

சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு என்பது ஜனநாயக அமைதியான மற்றும் சரியான அணுகுமுறை. சரியானதைச் செய்ய அமெரிக்கா தலைமை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, UNHRC இல் இலங்கையின் ஏமாற்று சூழ்ச்சிகள், சீனா மற்றும் ரஷ்யாவுடனான அதன் நெருங்கிய கூட்டு பற்றிய குறிப்புகள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் மூலம் அமெரிக்க காங்கிரஸிடம் பின்வரும் நான்கு விடயங்கள் கோரப்பட்டுள்ன:

  1. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஆதரிக்க அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள்.
  2. ஈழத் தமிழர்களின் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தீர்மானிக்க சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கான முன்முயற்சிகளை எடுங்கள்.
  3. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையின் பரிந்துரையைத் தொடர ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பயன்படுத்த அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள்.
  4. இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை முறையாக அங்கீகரியுங்கள். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026