முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் மயமாக்கக்கூடாது - விநாயகமூர்த்தி சகாதேவன் ஆதங்கம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் மயமாக்கக்கக்கூடாது என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவிக்கிறார்.
முள்ளிவாய்க்காலானது எமக்கு பல பாடங்களை கற்றுத்தந்திருக்கிறது. இந்தப் பாடங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் எதிர்கால சந்ததிக்கு கடத்தப்பட வேண்டும் என அவர் கூறுகிறார்.
ஈழத் தமிழர்களின் சமகால அரசியல் போக்கு என்பது அதிக பேசுபொருளாகிக்கொண்டிருக்கும் இப்போதைய சூழலில், மரணித்தவர்களை நினைவேந்துகின்ற விடயம் கூட இப்போது அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் போரின் வடுக்களை சுமந்து வாழ்வோரின் ஆரம்ப காலங்கள் பற்றிய கருத்துக்களையும் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகாதேவன் இவ்வாறு பகிரந்துகொள்கிறார்.
பகுதி - 1
பகுதி - 2
