ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…!

United for Human Rights United Nations Tamils Sri Lanka England
By Theepachelvan Dec 07, 2023 04:48 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

ஈழத் தமிழினம் தனது தலைவிதியை தாமே நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக தன்னாட்சி அதிகாரத்தைக் கோரி வருகிறது.

உலகில் உள்ள தேசிய இனங்கள் யாவும் தன்னாட்சி அதிகாரத்தைக் கோரும் உரித்துடையவை.அதனை மறுக்கின்ற உரிமை எவருக்கும் இல்லை.

இதேவேளை இலங்கைத் தீவின் அரசியல் வரலாறு என்பது ஈழத் தமிழ் மக்கள் தன்னாட்சியைக் கோரும் நியாயத்தைக் கொண்டவர்கள் என்பதை நியாயப்படுத்துகின்றது.

குறிப்பாக வரலாறு முழுவதும் தொடர்கின்ற இன ஒடுக்குமுறைகளும் இனப் படுகொலைகளும் ஈழத் தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை ஒன்றே தலைவிதியை தீர்மானிக்கும் விடுதலை என்பதை உணர்த்தி நிற்கிறது.

தன்னாட்சிக்கு ஆதரவான உலகக் குரல்

ஈழத் தமிழ் மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அவசியம் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே கூறியிருக்கிறார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்து நடந்த விவாதத்தில் பங்கு கொண்டு உரையாற்றி சமயத்தில் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே இந்தக் கருத்தை கூறியிருப்பது, ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவான உலகக் குரலாகும்.

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…! | Eelam Tamils Need Self Determination Genocide

அத்துடன் சிறி லங்கா அரசு, பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற அக்கறை காணப்படுவதாவும் அவர் குறிப்பிட்டுள்ளதும் இலங்கையின் உண்மை நிலவரமாகும்.

இலங்கை தூதரகத்தின் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு விடயத்தை மார்ட்டின் கவனப்படுத்தியுள்ளார்.

நவம்பர் 2023 வரை காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் தேடும் பிரிவினர் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்டவர்களில் 16 பேரை உயிருடன் கண்டுபிடித்துள்ளனர் 3 பேர் உயிரிழந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர் என இலங்கை தூதரகம் தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

18000 தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக நம்ப படுகின்றது அப்படியானால் ஏனையவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் அவர்கள் குறித்து தெரிவிப்பதற்கு என்ன ஆவணங்கள் உள்ளன? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு இலட்சத்திற்கு அதிகமானவர்கள் படுகொலை

இதேவேளை, இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைப் போரில் ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரத்து அறுநூற்று 97பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை இலங்கை அரசும், சில நாடுகளும் ஐ.நா அமைப்பும் குறைத்துச் சொல்லி வருகின்ற நிலையில், பன்னாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான மார்டின் டே ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமையை தனது உரையில் ஏற்றுப் பதிவு செய்துள்ளமையும் இங்கு முக்கியமானது.

ஐ.நாவின் கருத்தின் அடிப்படையில் இதனை அவர் பதிவு செய்திருப்பதும், உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதும் கவனிக்க வேண்டியதாகும்.

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…! | Eelam Tamils Need Self Determination Genocide

அத்துடன், “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான சவேந்திரசில்வா மற்றும் இலங்கையின் ஏனைய குற்றவாளிகளுக்கு எதிராக பிரிட்டன் உட்பட உலக நாடுகள் தடைகளை விதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

பாரிய அநீதிகளில் ஈடுபட்டவர்கள் பிரிட்டனிற்குள் வரஅனுமதிக்கப்படமாட்டார்கள் என காண்பிப்பதன் மூலம் பிரிட்டன் அமெரிக்கா, கனடாவின் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதும், பன்னாட்டு சூழலில் ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதில், முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் தருகிறது.

தன்னாட்சி என்றால்

தன்னாட்சி அல்லது சுயநிர்யணம் என்றால், ஒரு மக்கள் குழு அல்லது ஒரு இனம், சுயமாக, சுதந்திரமாக தமது அரசியல் ஏற்பாட்டைத் தீர்மானிக்கும் உரிமையாகும்.

தன்னாட்சி என்ற சொல்லைக் காட்டிலும் சுயநிர்யண உரிமை என்ற சொல்லே தமிழ் சூழலில் அதிகமும் பயன்பாட்டில் உள்ளது. அந்த அடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக சுயநிர்யண உரிமையைக் கோரி வருகிறார்கள்.

சுய நிர்ணய உரிமையைக் கோரும் உரித்துடையவர்கள் ஈழத் தமிழ் மக்கள் என்பதை கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய தலைவர்களும் சரி, ஆயுதப் போராட்டமும் சரி, ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்தைய தலைவர்களும் சரி வலியுறுத்தி வருகின்றனர்.

“வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை” என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…! | Eelam Tamils Need Self Determination Genocide

ஐக்கிய நாடுகள் சபை தன்னாட்சி குறித்து கூறும் விடயமும் முக்கியமானது. “அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR). ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: “எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.” என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்திலும் தன்னாட்சி குறித்து பதிவு செய்திருக்கிறது.

“ஒரு தேசிய இனத்தினராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரினதும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.” என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு

சுதந்திர இலங்கையில், ஈழத் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதுடன், ஈழத் தமிழ் மக்கள்மீது பாரிய இன ஒடுக்குமுறைகளும் நிகழ்த்தப்பட்டன.

தனிச்சிங்களச் சட்டம் ஒரு உரிமை மறுப்பாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராக ஈழத் தமிழ் மக்கள் போராடிய வேளை 1985இல் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதனால் ஈழத் தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கை இன்னமும் வலுப்பெற்றது.

என்ற போதும்கூட சிறி லங்கா தேசம், ஈழத் தமிழ் மக்கள் மீதான பாரபட்சத்தை அதிகரித்ததுடன், தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை, இனப்படுகொலையை செய்யும் வழியில் தன்னைத் தீவிரப்படுத்தியது.

இதனால் கடந்த காலத்தில் வரலாறு முழுவதும் பல இனப்படுகொலை நிகழ்வுகளை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…! | Eelam Tamils Need Self Determination Genocide

இந்த நிலையில் தான் ஈழத் தமிழ் மக்கள் தனி ஈழமே தீர்வென்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனிநாடு கோரிப் போராடி, பல வெற்றிகளை குவித்து தமிழீழ நிழல் அரசை ஏற்படுத்திய போதும் பல தடவைகள் தமிழர்களின் சுயநிர்யண உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தீர்வொன்றை முன்வைக்குமாறு பேச்சுவார்த்தைகளின் வழி வலியுறுத்தினர்.

ஆனாலும் ஏமாற்றுதலும் இழுத்தபடியும் தொடர்கின்றது. எனவே, இலங்கைத் தீவில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் தமது தலைவிதியை தீர்மானிக்கும் தன்னாட்சி ஒன்றே தீர்வு என்பதையே காலமும் சூழலும் தொடர்ந்தும் கணித்து வலியுறுத்துகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 07 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

01 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024