ஈழத்து தமிழ் பெண் வெளிநாட்டு அகதி முகாமில் பரிதாபமாக மரணம்
Sri Lankan Tamils
Sri Lanka
Indonesia
By Pakirathan
இந்தோனேசியாவின் அகதி முகாமில் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் அகதிப் பெண் அசோக்குமார் லலிதா சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் (19.06.2023) உயிரழந்துள்ளர்.
குறித்த பெண் கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறி இந்தோனேசியாவிலே அகதி முகாமில் வாழ்ந்து வருகின்றார்.
இவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், கணவன் அசோக்குமார் மற்றும் இரு பிள்ளைகளுடன் இந்தோனேசியாவில் மெடான் நகரில், பெலவான் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சகோதரியின் இறப்பு
இந்தநிலையில், குறித்த சகோதரி நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டடிருந்த நிலையில் போதிய மருத்துவ வசதி கிடைக்காமையால் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
