விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்க புதிய திட்டம் : விவசாய அமைச்சு
Mahinda Amaraweera
Sri Lanka
Ministry of Agriculture
By Beulah
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய, விவசாய நடவடிக்கைகளுக்காக ஆயிரம் இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வகையில், அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களம்
அத்துடன், விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியிலேயே குறித்த தொகை ஒதுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த வருடம் நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளைசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி