அதிகரிக்கும் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை: வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அதனை சமாளிக்க அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை எடுக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான முட்டைகளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு சுமார் 20 ரூபாவாகும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரணம்
இந்நிலையில், உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பை நியாயப்படுத்தும் எந்தவொரு காரணத்தையும் கோழி உற்பத்தியாளர்களால் முன்வைக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை உயர்த்துவது செயற்கையான செயல் என்று கூறிய அமைச்சர், இந்த தயாரிப்புகளால் நுகர்வோரை சுரண்டுவதற்கு வியாபரிகளுக்கு எப்பொழுதும் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |