நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடை நிறுத்தம்! வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர அறிவித்துள்ளார்.
இந்த வாரம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விலைமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
முட்டைக்கு கடும் தட்டுப்பாடு
அதேவேளை இந்த இடைநிறுத்ததால் நாடு முழுவதும் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முட்டைகளை அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்தால் வியாபாரத்தில் நட்டம் ஏற்படுவதாகவும் வியாபாரத்திற்கு தேவையான கால்நடை தீவனம், போக்குவரத்து கட்டணங்கள் இதை விட அதிகமாக செலவாகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைகளின் விலைகளானது தற்போது 45 ரூபாய்க்கு குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.