முட்டை விலை அதிகரிப்பு: இறக்குமதி தொடர்பில் வர்த்தக அமைச்சு விளக்கம்
Sri Lanka
Nalin Fernando
Egg
By Dilakshan
வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை முட்டை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேண்டுமென்றே முட்டை விலையை அதிகரிப்பதன் காரணமாக முட்டையின் விலையை கட்டுப்படுத்த முட்டை உற்பத்தியாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரின் தீர்மானம்
அத்தோடு, தற்போது ஒரு நாட்டுக் கோழி முட்டை, 60 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
அதேவேளை, ஏற்கனவே இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டையை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்