சடுதியாக அதிகரித்த முட்டை விலை: குற்றம் சுமத்தும் நுகர்வோர்!
Sri Lanka
Weather
Egg
By Kanooshiya
சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
தற்போது சந்தையில் ஒரு முட்டையின் விலை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்பொருள் அங்காடி
அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 470 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் சீரற்ற வானிலை நிலவ முன்னர் வரையில் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்பட்ட முட்டை பற்றாக்குறையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்