நடுக்கடலில் பற்றி எரிந்த அதிசொகுசு படகு - பிரித்தானியர் மூவர் மாயம் (காணொளி)
எகிப்தின் செங்கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பிரித்தானிய பயணிகளைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
சுறாக்கள் மற்றும் டொல்பின்களைப் பார்க்க நல்ல இடமாக அறியப்பட்ட எல்பின்ஸ்டோன் ரீஃப் அருகே படகு வந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து.
குறித்த படகில் 14 பணியாளர்கள் மற்றும் 15 பிரித்தானிய பயணிகள் உட்பட மொத்தம் 29 பேர் இருந்ததாகவும் அந்தப் படகில் இருந்து 12 பிரித்தானியர்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம்

மீட்கப்பட்ட அனைவரும் காயம் ஏதும் இன்றி, நலமுடன் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிற படகுகள் மூலம் 3 பிரித்தானிய பயணிகளை தேடும் பணி இன்னும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
حريق مركب سفاري بطول ٤٠ متر اسمها hurricane في جنوب البحر الأحمر و بالتحديد منطقة Elphinstone و انقاذ معظم السياح فيما عدا ٣ لا يزالوا مفقودين و يعتقد ان جنسيتهم انجليز، نتمني السلامه للجميع و ربنا ينجي المفقودين.
— RedSea_Anglers ⚓ ? ?????? (@HanySadekk) June 11, 2023
المصدر: شهود عيان pic.twitter.com/hRg1YlzNb7