யாழில் முதியவர் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்றையதினம் (02) பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தில் பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த மா.சின்னமணி (வயது 95) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த 26ஆம் திகதி அன்று சுருட்டு புகைப்பதற்கு பற்றவைத்த தீக்குச்சியை தவறுதலாக அவர் அணிந்திருந்த ஆடையில் போட்டவேளை தீப்பற்றியதில் அவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மரண விசாரணை
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (02) மாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்