ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கிய மாற்றம்: அதிரடியாக எடுக்கப்பட்டுள்ள முடிவு
இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரை தொடர்ந்து ஏற்பட்ட இரு தரப்பினதும் உடன்பாட்டின் ஒரு மாதத்துக்குப் பிறகு, ஈரானின் உச்ச பாதுகாப்பு சபை புதிய பாதுகாப்பு பேரவை ஒன்றை உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு பேரவை உருவாக்க, உச்ச தேசிய பாதுகாப்பு சபையினால் அனுமதிக்கப்பட்டதாக அதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேரவையின் தலைவராக ஈரான் ஜனாதிபதி செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பரந்த கட்டமைப்பு மாற்றம்
அதில் முக்கிய ராணுவத் தலைவர்கள், அமைச்சர்கள், மற்றும் சிறப்புப் பொறுப்பாளர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவுள்ளனர்.
குறித்த அமைப்பானது, “பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்தல்” மற்றும் “ஈரானின் ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்துதல்”ஆகியவற்றுக்காக பணிபுரியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவு, ஈரானின் பாதுகாப்பு அமைப்பில் மேற்கொள்ளப்படும் பரந்த கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா
