டிப்பர் வாகனத்தால் மோதுண்ட முதியவருக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Jaso
திருகோணமலை கிண்ணியா காவல்துறை பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் நேற்று (30)மாலை இடம் பெற்ற டிப்பர் வாகன விபத்தில் முதியவர் வயது (72) ஒருவர் பலியானார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவரை டிப்பர் வாகனம் மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து அவர் கிண்ணியா தளவைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (31) உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்