மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்: முதியவர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Fishing
Sri Lanka
By Shalini Balachandran
அனுராதபுரத்தில் முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தரக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நொச்சியாகம காவல் பிரிவுக்குட்பட்ட அந்தரக்குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் இருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்துச் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி