இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமலின் சுவாரஸ்யமான பதில்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் அவரை அழைத்திருந்தது.
அறிக்கைகளின்படி, இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குவிந்துள்ள ஆதரவாளர்கள்
அதன்படி, அவர் சற்று நேரத்திற்கு முன்பு ஆணையத்தில் அவர் முன்னிலையாகியுள்ளார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் சிலர் கூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது எமது ஐ.பி.சி ஊடகவியலாளர் நாமலிடம், ''வழமையை போல உங்களுக்கான ஆதரவாளர்கள் ஏன் வரவில்லை" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய அவர், '' அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தின் காரணமாக, ஆதரவாளர்களை வரவேண்டாம் என கூறினேன்" என தெரிவித்தார்
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவில் முன்னிலை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |