அரச சேவை இடமாற்றங்கள் - தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Election Commission of Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Election
By Pakirathan
1 வாரம் முன்
எதிர்வரும் மார்ச் 9ம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரச சேவை இடமாற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யமுடியாது என ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த காலப்பகுதியில் இடமாற்றங்கள் தேவையெனில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்து அதன் அனுமதியுடனே இடமாற்றங்களை செய்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான சகல சட்ட ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும், தேர்தல் நிறைவடையும் வரை குறித்த சட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்