வாக்களிப்பு தினத்தில் இடம்பெற்ற சட்டமீறல்கள் : அம்பலப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு
இன்று நடைபெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலின் போது மொத்தம் 164 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் இயக்கம் வெளியிட்ட (PAFFREL)தகவலின்படி, மீறல்களில் 109 உறுதிப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 55 உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.
பல்வேறு சட்ட மீறல்கள்
அரசியல் கட்சி/வேட்பாளர் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம், சட்டவிரோத கட்சி அலுவலகங்களை பராமரித்தல், வாக்காளர்களை செல்வாக்கு செலுத்துதல், வாக்குச் சீட்டுகள் தொடர்பான முறைகேடுகள், சட்ட விரோதமாக வாக்களித்தல்/ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி செய்தல் ஆகியவை தொடர்பான மீறல்கள் பதிவாகியுள்ளன.
2024 ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றதாக பவ்ரல் மேலும் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் போது பாரிய தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |