தேர்தலை முன்னிட்டு அரச - தனியார் ஊழியர்களின் விடுமுறை : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் (Election Commission) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில, சாதாரண விடுமுறை அல்லது ஊதியக் குறைப்பு இல்லாமல் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாக்களிக்க உரிய விடுமுறை வழங்கப்படுவதில்லை என ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை
இதனை கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட காராணங்களுக்கான விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவதற்தான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணையகத்தின் அறிவிப்பு
அதற்கமைய அரச அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் என்றும், சம்பளம் பிடிப்பு இல்லாமல் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |